இந்திய - அமெரிக்க நட்பால், சொல்லமுடியாத இடமெல்லாம் எரிச்சலுடன் அலையும் சீனா.. அமெரிக்க வெளியுறவுத்துறை..! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கானது நடந்து வருகிறது. லடாக் எல்லையில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது, உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சீனாவின் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டு இருந்த போதிலும், மானம் கருதி சீனா தற்போது வரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. 

எல்லை பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனா, பசுபிக் பிராந்தியத்தில் தனக்கு அருகில் இருக்கும் நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பல முயற்சிகளையும், சூழ்ச்சிகளையும் செய்து வருகிறது. 

இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா குரல் கொடுத்து வரும் நிலையில், சீனாவின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியா - அமெரிக்கா உறவை பார்த்து சீனா கலக்கம் அடைந்துள்ளது. 

முன்னேறி வரும் இந்தியாவுடன் பயத்தை ஏற்படுத்தி, போரை தூண்டும் வருகையில் சீனா செயல்படுகிறது. ஆசிய - பசுபிக் பகுதியில் இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாமல், பிற நாடுகளையும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் அண்டை நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக சீனா இருக்கிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America External Ministry says about India America Friendship 20 November 2020


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->