ஊரடங்கு தளர்வுகளால் நாளொன்றுக்கு 1 இலட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு.. பீதியை ஏற்படுத்திய தகவல்.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கடுமையான அளவு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் 2,727,853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 130,122 பேர் பலியாகியுள்ளனர். 1,143,334 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

அமெரிக்காவின் நோய்த்தொற்று நிபுணரான அந்தோணி பாசி, அமெரிக்க அதிபர் தலைமையிலான வைரஸ் பணிக்குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் அங்குள்ள பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். 

இது குறித்த பேட்டியில், அமெரிக்கா கொரோனா தொடர்பாக தவறான திசையில் பயணம் செய்து வருகிறது. அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கு தளர்வுகளில் கூட்டங்களை தவிர்க்க வேண்டும். நான் மிகவும் அக்கறையுடன் இதனை உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தற்போது நடக்கும் விஷயத்தில் போதுமான திருப்தியில்லை. ஏனெனில் நாம் தவறான திசையில் சென்று கொண்டு இருக்கிறோம். 

டெக்சர்ஸ் மற்றும் புளோரிடா பகுதிகளில் கடுமையான ஆபத்து இருக்கிறது. தினமும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை திறப்பதில் உள்ள ஆர்வத்தை, சோதனையிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America corona virus Outbreak says by Medical team


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->