டெல்டா வகை வைரசால் அமெரிக்காவுக்கு பேராபத்து - அமெரிக்க மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பல நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. 

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு ஆல்பா எனவும், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது. பிற நாடுகளில் உருமாறியுள்ள வைரஸ்களுக்கும் நாடுகளை குறிப்பிடாமல் மாற்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

டெல்டா வைரஸ் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியுள்ளது உறுதியான நிலையில், ஆல்பா வைரஸை விட டெல்டா மிகவும் வேகமாக பரவக்கூடியது என்பதால், அது உலக நாடுகளுக்கு மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்டா வகை வைரஸ் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அந்நாட்டின் மூத்த தொற்று நோய் நிபுணர் அந்தோணி பாஸி (Dr. Anthony Fauci) தெரிவித்து இருக்கிறார். கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கலை ஏற்படும் டெல்டா வகை வைரஸ், கொரோனாவை விட அதிவேகத்தில் பரவும் வீரியம் கொண்ட வைரஸ் என்றும், அமெரிக்காவில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் செயல்திறன் கொண்டுள்ளது " என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Chief Dr Anthony Fauci Warn about Delta Plus Variant 23 June 2021


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal