அமெரிக்காவில் கருப்பினச் சிறுவன் கைது: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, மிசிசிப்பி மாகாணத்தில் 10 வயது கருப்பின சிறுவன் பொது வெளியில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சிறுவன் மூன்று மாதங்களுக்கு காவல் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் எனவும் மறைந்த கூடை பந்து வீரர் கோபி பிரயன்ட் குறித்து 2 பக்கங்கள் எழுதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார். 

சிறுவன் தாயுடன் வெளியில் சென்ற போது அவர்களின் காருக்கு பின்னால் சிறுநீர் கழித்ததால் காவல்துறையினர் உடனடியாக சிறுவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

மேலும் காவல் நிலையத்தில் 10 வயது சிறுவனை சிறையில் பூட்டி வைத்ததாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். குழந்தையின் வழக்கறிஞர், இது போன்ற குற்றத்திற்கு ஒரு வெள்ளை இன சிறுவன் கைது செய்திருக்க மாட்டார்கள் எனவும் வலக்கை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அமெரிக்காவில் பொதுவெளியில் சிறுநீர் கழிக்காத ஆண் கிடையாது. இந்த குற்றத்திற்காக குழந்தையை கைது செய்திருப்பது ஏற்க முடியாதது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America 10 year old boy arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->