இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு.!!
again extension of curfew in sri lanka
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளை காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இலங்கையில் போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்சேவின் இல்லத்திற்கு தீ வைத்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ராஜபக்சேஷ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணி வரை ஊரடங்கை நீட்டித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
English Summary
again extension of curfew in sri lanka