மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..6 பாலஸ்தீனியர்களை சுட்டுக்கொன்ற ஹமாஸ் ஆயுதக்குழுவினர்!
Again a shocking incident Hamas militants kill 6 Palestinians
6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனையில் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நீடித்து வந்தது. இந்த போரில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து.
அதன்படி , காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி வருவதுடன் . தங்கள் வசம் இருந்த இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.மேலும், இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து வெளியேறி வருவதால் காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட எஞ்சிய பணய கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் பணியில் ஹமாஸ் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனையில் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுவெளியில் அவர்களை சுட்டுக்கொன்றனர். முன்னதாக, 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Again a shocking incident Hamas militants kill 6 Palestinians