பெண்கள் ஜிம் மற்றும் பூங்காவுக்கு செல்ல தடை.! ஆப்கானிஸ்தான் அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்தது.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பூங்காக்களில் ஆண்கள் இருக்கும் போது பெண்களை அனுமதிக்கக் கூடாது. திரைப்படம், கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட முடியாமல் போய்விட்டது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஜிம் மற்றும் பூங்கா உள்ளிட்டவைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு செய்தி தொடர்பாளர் ஒருவர் பேசியபோது, "ஆண்களுக்கும் பெண்களுக்கும் பூங்காவில் வெவ்வேறு நாட்களில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் அனைவரும் ஒன்றாக தான் இருக்கின்றனர். அத்துடன் ஹிஜாப் அணியாமல் பெண்கள் வருகின்றனர். எனவே அவர்களுக்கு ஜிம் மற்றும் பூங்காவுக்கு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Afghanistan women should not allowed to Gym and park


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->