திருமணமான 10 மாதத்தில் இரண்டாவது திருமணம்: அதிர்ச்சி கொடுத்துள்ள ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான்..! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த Bowling All-rounder மற்றும் வலதுகை துடுப்பாட்ட வீரர் ரஷித் கான். ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர். இவர் முதல் திருமணம் செய்த 10 மாதங்களில் 02-வது திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி.20 கேப்டனாக ரஷித் கான் உள்ளார். இதுவரை 108 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடி 182 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 27 வயதான இவர், முதல் திருமணத்தை 2024 அக்டோபரில் காபூலில் செய்து கொண்டார். அவரது 03 சகோதரர்களான, அமீர் கலீல், சாகியுல்லா மற்றும் ரசா கான் ஆகியோரும் அதே நாளில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ரஷித்கானின் 02-வது திருமணம் குறித்து சில மாதங்களுக்கு முன், அதாவது ஆகஸ்ட் 02-இல் நடந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''ஆகஸ்ட் 02-இல் என் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தமுள்ள அத்தியாயத்தை நான் தொடங்கினேன். நான் எப்போதும் விரும்பிய அன்பு, அமைதியை கொண்ட ஒரு பெண்ணை மணந்தேன். அவர் என் மனைவி, மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். இரக்கத்தையும், ஆதரவையும், புரிதலையும் காட்டிய அனைவருக்கும் நன்றி..!'' என்று தெரிவித்துள்ளார். 

அதாவது அவருக்கு முதல் திருமணம் செய்த 10 மாதத்தில் 02-வது திருமணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரசித்கானின் 02வது திருமணபுகைப்படங்கள் இணையத்தில் படங்கள் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Afghan cricketer Rashid Khan marries for the second time in 10 months


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?


செய்திகள்



Seithipunal
--> -->