தீ பற்றி எரியும், பூமியின் நுரையீரல்! கோபத்தில் கொந்தளிக்கும் பிரபலம்!!
actress simran tweet about amazon forest fire
அமேசான் காட்டில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கே இருந்த பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம் ஆகியது. காட்டில் இருந்த விளங்குகள் பலவும் தீயில் எரிந்து கருகியது.

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. மிகவும் அடர்ந்த அழகான காடாக அமேசான் காடு இருந்திருக்கிறது.

அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. தீ விடமால் எரிந்து கொண்டே இருப்பதால் காடு மிகவும் மோசமான அழிவில் சென்று கொண்டு இருக்கிறது.

இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கோபமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பூமியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது. உலகை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக உள்ளது. ஏன் இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
actress simran tweet about amazon forest fire