'இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே கோபத்துடன் வெளியேறிய மம்தா'; நடந்து என்ன..?
Mamata angrily walked out midway through the meeting with the Chief Election Commissioner of India
இந்திய தேர்தல் ஆணையம் பீஹாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேருவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணியை மேற்கொண்டு வந்தது. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அத்துடன், மாநிலத்தில், SIR நடவடிக்கைக்கு பயந்து பலர் தற்கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதோடு, SIR பாஜக உருவாக்கிய செயலியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களை சந்தித்தனர். இந்த சந்தித்த பிறகு, மம்தா பானர்ஜி கடுங்கோபத்துடன் வெளியேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கோபத்துடன், வெளியில் வந்த மம்தா, தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு இடைத்தரராக செயல்படுவதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையருடன் பேசிக் கொண்டிருந்த மம்தா பானர்ஜி, திடீரென கோபத்துடன் பாதியிலேயே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது; சட்டத்தின் ஆட்சி வெல்லும். சட்டத்தை கையில் எடுக்கும் எவரும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய சட்டம் மற்றும் அதிகாரத்தின்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
அத்துடன், இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறியது முறையாக குறித்துக் கொள்ளப்பட்டது என்றும், கூட்டத்தின் போது பலமுறை இடைமறித்து பேசினர். பின்னர் மம்தா பானர்ஜி கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே கோபத்துடன் வெளியேறினார் என குறிப்பிட்டுள்ளது.
English Summary
Mamata angrily walked out midway through the meeting with the Chief Election Commissioner of India