பிட்கெய்ன் தீவில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


பசிபிக் பெருங்கடலில் அமைந்த பிட்கெய்ன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த தீவுகளில் ஒன்று பிட்கெய்ன் தீவு. இந்த தீவில் உள்ள ஆடம்ஸ்டவுன் பகுதியில் இருந்து 1,621 கி.மீ. கிழக்கே பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. 

எரிமலை தீவுகள் என அழைக்கப்படும் பிட்கெய்ன், ஹெண்டர்சன், டூசி மற்றும் ஈனோ ஆகிய 4 தீவு பகுதிகளை உள்ளடக்கியது இந்த தீவு. இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் வர கூடிய இதில் மிக குறைந்த அளவிலேயே மக்கள் வசித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible earthquake suddenly occurred in Bitcoin Island


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->