அமெரிக்காவில் 4 பேரை சுட்டுக்கொன்ற மாணவன்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை சுட்டுக்கொன்ற மாணவன். இதில் படுகாயம் அடைந்த சில பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று துப்பாக்கிசூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் படு காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதில், இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் அடையாளம் காணப்பட்டது. பின்னர், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் சில பேர்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இந்த விசாரணையில் 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது பள்ளி மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுள்ளன. தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தில் மாணவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A student who shot 4 people in America Police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->