அயர்லாந்தில் மீண்டும் இனவெறி தாக்குதல்..? ''இந்தியாவிற்கு திரும்பிச் சொல்லுங்கள்'': 06 வயது சிறுமியிடம் அத்துமீறி, அந்தரங்கப் பகுதியில் சைக்கிளால் தாக்கிய சிறுவர்கள்..!
A group of boys in Ireland raped and attacked a 6 year old Indian origin girl with a bicycle
இந்திய வம்சாவளியை சேர்ந்த 06 வயது சிறுமி ஒருவரை அயர்லாந்தின் வாட்டர் போர்டில் சிறுவர்கள் குழு ஒன்று இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று கூறி அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு வெளியே அவளுடைய நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த்துள்ளாள். அப்போது அங்கு வந்த 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவ, சிறுமியர், 06 வயது சிறுமியை பார்த்து, 'இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள்' என்று கூறியதோடு, சிறுமியை சைக்கிளால் தாக்கி அத்துமீறி இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செவிலியரான சிறுமியின் தாய் இது குறித்து கூறியதாவது: வேலை காரணமாக சமீபத்தில் அயர்லநாந்து குடியுரிமை பெற்று வாட்டர்போர்டில் குடியிருந்து வருவதாகவும், தன்னுடைய 06 வயது மகள் வீட்டின் அருகே விளையாடும் போது, அங்கு வந்த சிறுவர்கள் சிலர், இந்தியாவுக்கு திரும்பிச்செல்லுங்கள் என்று கூறி தாக்கி உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும் போது, அவர் தனது 10 மாதம் ஆன எனது மகனுக்கு உணவளித்து கொண்டிருந்த போது, விளையாட சென்ற மகள் சிறிது நேரத்திலேயே அழுதுகொண்டே வீட்டிற்குள் திரும்பி வந்ததாக கூறியுள்ளார். அப்போது அவள் மிகவும் வருத்தப்பட்டத்தோடு, அவளால் பேசக்கூட முடியவில்லை, அவள் மிகவும் பயந்து போய் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அப்போது, என்ன நடந்தது என்று விசாரித்ததில், தனது மகளை விட வயது அதிகமுள்ள சிறுவர்கள் கும்பல் ஒன்று தனது அந்தரங்கப் பகுதிகளில் சைக்கிளால் தாக்கியதாகவும், அவர்களில் ஐந்து பேர் அவரது முகத்தில் குத்தியதாகவும் தனது மகளின் தோழிகள் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது மகள், தற்போது படுக்கையில் அழுது கொண்டே இருப்பதாகவும், வெளியே சென்று விளையாட மிகவும் பயப்படுவதாகவும், எங்கள் சொந்த வீட்டிற்கு முன்னால் கூட எங்களால்இங்கு பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன், 06 வயதான மகளால் பயமின்றி விளையாட முடியாது என்றும், அவளுக்காக நான் மிகவும் வருத்தப்படுவதாகவும், அவளைப் பாதுகாக்க முடியவில்லை என்று கண்கலங்கியுள்ளார்.
மேலும் அங்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று அவர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும், தனது மகளை தாக்கிய சிறுவர் கும்பலை பார்க்கும்போது, அவர்கள் என்னை பார்த்து சிரித்ததாகவும் வேதனை அடைந்துள்ளார். அந்த சிறுவர்களின் வயது 12 முதல் 14 வயது இருக்கும். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன்.
ஆனால், அந்த புகாரில் சிறுவர்களுக்கு தண்டனை வழங்க கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்கு இனிமேல் இவ்வாறு நடக்காதவாறு அவர்களுக்கு நல்ல ஆலோசனை மற்றும் சரியான வழிகாட்டுதலை வழங்க கோரிகை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் போலீசார் சரியான நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
A group of boys in Ireland raped and attacked a 6 year old Indian origin girl with a bicycle