செல்போன் சிக்னல் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்.! 89 வீரர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பத்து மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஐநா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

மேலும் போரில் ரஷ்ய படையில் கைப்பற்றிய நான்கு மாகாணங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் ரஷ்யா கைபற்றிய உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள மகீவ்கா பகுதியில் முகாமிட்டிருந்த ரஷ்ய படைகள் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா வழங்கிய அதிநவீன ஹிம்ராஸ் ராக ஏவுகணை மூலம் துல்லியமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ரஷ்ய வீரர்கள் செல்போன்கள் பயன்படுத்தியதன் மூலம் உக்ரைன் துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

மேலும் அதிக அளவில் ரஷ்ய வீரர்கள் செல்போனை பயன்படுத்தியதால், உக்ரைன் படைகள் செல்போன் சிக்னல் மூலம் வீரர்களின் இருப்பிடத்தில் துல்லியமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் மூலம் ரஷ்யாவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

89 Russia soldiers killed in ukraine attack on makiivka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->