துருக்கி : உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி.! 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மேற்கு துருக்கியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் அய்டின் மாகாணம் நசிலி மாவட்டத்தில் உள்ள பரபரப்பான வீதியில் துருக்கிய டோனர் கபாப் உணவகத்தில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 3.35 மணியளவில் ஓட்டலில் உள்ள சிலிண்டரை மாற்ற முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக வாயு கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து அய்டின் மாகாணத்தின் ஆளுநர் ஹுசைன் அக்சோய், நேற்று நடந்த சோகத்தில் ஐவர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மேற்கு இஸ்மிர் மாகாணத்திற்கு மாற்றப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 killed 5 injured in cylinder blast in turkey resturant


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->