இந்தோனேசியாவில் சட்ட விரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு.! 7 பேர் பலி - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் சட்ட விரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்திரா மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளில் முறையாக உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக பல தங்கச் சுரங்கங்கள் இயங்கிவருகின்றன.

இதில் கலிமந்தன் மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவு பகுதியில் சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மண்ணில் புதைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5 பேர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 died in gold mine landslide in Indonesia


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->