60 ஆண்டுகளுக்கு பிறகு சமூகவலைதளத்தில் நிகழ்ந்த சுவாரசிய சம்பவம்!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவின் தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில், பால் மற்றும் அவரது ஒன்பது வயதான மகன் ஜியா எலியாத்தும் கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது கடற்கரை மணல் பகுதியில் கண்ணாடி பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதை கையில் எடுத்து பார்த்த ஜியா எலியாத் அந்த கண்ணாடி பாட்டிலில் கடிதம் ஒன்று அடைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.

உடனே அந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து அந்த கடிதத்தை சிறுவனான ஜியா எலியாத் படித்த போது , இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 1969 ஆம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி 13 வயதே ஆன கில்மோரே என்பவர் அந்த கடிதத்தை எழுதியது தெரியவந்தது. அக்கடிதத்தில், இங்கிலாந்தில் இருந்து தான் மெல்போர்ன் நகரத்திற்கு தான் குடிபெயர உள்ளதாகவும், ஆஸ்திரேலியா செல்லும் கப்பலில் இருந்து தான் இந்த கடிதத்தை எழுதுவதாகவும் கில்மோரே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கடிதத்தை பார்க்கும் நபர் தனது கடிதத்திற்கு பதில் அனுப்பும் படியும் அந்த கடிதத்தில் அவர் எழுதி உள்ளார். இதனையடுத்து கில்மோரே எங்கு இருக்கிறார் என்பதை அறியாமல் சிறுவன் எலியாத் பதில் கடிதம் எழுதி அதனை பாட்டிலில் அடைத்து கடலில் வீசியுள்ளார். இந்த நிகழ்வை தனது சமூக வலைத்தளங்களில் சிறுவனின் தந்தை பதிவேற்றம் செய்தார். அந்த பதிவு படுவேகமாக ஆயிரக்கணக்கான நபர்களால் ஷேர் செய்யப்பட்டு இறுதியாக கில்மோரோவை சென்றடைந்தது. 

இதை பார்த்த படுஷாக் ஆன கில்மோரோ, இது குறித்து கூறுகையில் விளையாட்டாக எழுதி கடலில் வீசினேன். சமீபத்தில்தான் என் மனைவியிடம் இது பற்றி கூறினேன். இப்போது அதற்கு பதில் வந்துள்ளது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என அந்த சிறுவனுக்கு பதிலளித்துள்ளார். கடிதம் எழுதிய போது நன்கு வயதான கில்மோரோவுக்கு இப்போது 63 வயதாகிவிட்டது. அவர் ஆங்கில ஆசிரியராக இருந்து ஓய்வுப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 years letters story


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->