ஸ்பெயினில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 6 பயணிகள் பலி - Seithipunal
Seithipunal


ஸ்பெயினில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் பொன்டேவேத்ரா மாகாணத்தில் உள்ள செர்டெடோ-கோடோபேட் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து நேற்று முன்தின இரவு கலீசியா பகுதியில் பாலத்தை கடக்க முயன்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து பாலத்திற்கு கீழே சுமார் 30 மீட்டர் (100 அடி) தொலைவில் லெரெஸ் ஆற்றில் பாதி மூழ்கிய பேருந்தின் நீல நிற மேற்கூரையை பார்த்த அவ்வழியாக சென்ற ஒருவர் இதுகுறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இரண்டு சடலங்களை மீட்டெடுத்தனர்.

இதையடுத்து கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இரவு மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் நேற்று விடியற்காலையில் மலை மீட்புப் பிரிவுகள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணி தொடங்கியது. இதில் நான்கு உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 killed when bus plunges into river in Spain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->