தென்கொரியா : சுரங்கப்பாதையில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் தலைநகர் சியோலின் குவாச்சியோன் பகுதியில் புறநகர் விரைவு சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் சரக்கு லாரி பேருந்தின் மீது மோதியதில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நன்கு கொழுந்துவிட்டு எரிந்த தீ சுரங்கப்பாதையின் மேற்கூறையில் பற்றி பரவத் தொடங்கியது. இதையடுத்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 37 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 20 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 died in tunnel fire accident in south korea


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->