பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 6 வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி வழக்கத்திற்கும் அதிகமாக கனமழை பெய்ததில் பலூசிஸ்தான் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியது.

கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 124 பேர் உயிரிழந்துள்ளனர். 10,000 வீடுகள் சேதமடைந்து, 1,97, 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 712 கால்நடைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய பலூசிஸ்தான், சிந்து, கில்கிட்-பல்திஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் மக்களை மீட்க மற்றும் நிவாரண பணிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து பலூசிஸ்தானின் லாஸ்பெலா பகுதியில், வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதைத்தொடர்ந்து மாயமான அந்த ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்நிலையில் பாகிஸ்தானின் வின்தர் மற்றும் சஸ்சி புன்னு ஆலயம் பகுதிகளுக்கு இடையே ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி உட்பட 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 died in Pakistan army helicopter accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->