அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணமான மிசிசிப்பியின் அர்கபுட்லா பகுதியில் மூன்று துப்பாக்கியுடன் வந்த நபர் சரமாரியாக சுட்டதில் அவரது முன்னாள் மனைவி உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மாலை அர்கபுட்லா பகுதியில் 52 வயதான துப்பாக்கி ஏந்திய நபர் பெட்ரோல் நிலையக் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஊழியரைை கண்மூடித்தனமாக சுட்டு கொன்றுள்ளார்.

பின்பு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று தனது முன்னாள் மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, அடுத்தடுத்த வீடுகளிலும் தனது துப்பாக்கி சூட்டை தொடர்ந்துள்ளார். இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத தொடர்பு எதுவும் இல்லை எனவும், கைது செய்யப்பட்ட நபர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் மிசிசிப்பி கவர்னர் டேட் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள் நிலையில், இந்த துப்பாக்கி சூடு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மீது நடத்தப்பட்ட 73-வது துப்பாக்கிச்சூடு என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 died in another shooting incident in America


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->