ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய 55  சீக்கியர்கள் - காராணம் என்ன?.  - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அந்நாட்டின் ஆட்சி தலீபான்கள் கைக்கு சென்றதும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதிலும் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், லட்சக்கணக்கானோர் அந்நாட்டில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் கொள்ள ஆரம்பித்தனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் சீக்கியர்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து,  இந்திய அரசு சீக்கியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறையால், பாதிக்கப்பட்டோரை சொந்த நாட்டுக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சியாக, ஆப்கானிஸ்தானில் இருந்து 55 சீக்கியர்களை சுமந்து கொண்டு சிறப்பு விமானம் ஒன்று டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கி உள்ளது. 

இதுகுறித்து, நாடு திரும்பிய 55 சீக்கியர்களில் ஒருவரான பல்ஜீத் சிங் என்பவர் தெரிவிக்கும்போது, "ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது நிலைமை நன்றாக இல்லை. என்னை 4 மாதங்கள் வரை சிறையில் அடைத்து, எங்களுடைய முடிகளை அவர்கள் வெட்டி விட்டார்கள். இந்நிலையில், இந்தியாவுக்கு திரும்பியதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, ஆப்கானிஸ்தான் நாட்டில் சீக்கிய அகதியான சுக்பீர் சிங் என்ற கால்சா தெரிவிக்கும்போது, "எங்களுக்கு அவசர விசாக்களை வழங்கி, நாடு திரும்புவதற்கு  உதவி புரிந்ததற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களில் பலரது குடும்பத்தினர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டிலேயே தனித்து விடப்பட்டுள்ளனர். அவர்களில் 30 முதல் 35 பேரை அந்த நாட்டிலேயே விட்டு விட்டு நாங்கள் வந்துள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

55 Sikhs return in india


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->