உலக செய்திகள் || ஜோர்டான் தலைநகரில் சீட்டுகட்டு போல சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்.. ஐவர் பலி..! - Seithipunal
Seithipunal


அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் 25க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்று முன் தினம் மாலை அந்த குடியிருப்பு திடீரென சரிந்து விழுந்தது.  இதில், 25க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த இடிபாடுகளில் இருந்து 5 பேரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும்,7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.இதனிடையே கட்டிட இடிபாடுகளில் இன்னும் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 Members death in building collapse at jordans capital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->