ஒரே கணக்கு… புதிய மெயில் முகவரி...! ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வந்த அதிரடி அப்டேட்...! - Seithipunal
Seithipunal


மின்னஞ்சல் (E-mail) பயன்பாடு இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. “மெயில் பயன்படுத்தாதவர்களே இல்லை” என்று சொல்லும் அளவிற்கு அதன் தேவை உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஒரு விநாடியில் புகைப்படங்கள், கோப்புகள், தகவல்கள் அனைத்தையும் அனுப்பிவைக்கும் சக்தி மின்னஞ்சலுக்கே உரியது. பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையை வழங்கினாலும், இதில் கூகுளின் ஜிமெயில் (Gmail) தான் பயனர்களின் முதல் தேர்வாக நீடிக்கிறது.

உலகம் முழுவதும் தற்போது சுமார் 180 கோடி ஜிமெயில் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. பயனர்களின் அனுபவத்தை மேலும் எளிமையாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், கடந்த வாரம் வெளியான புதிய அப்டேட் ஒன்று ஜிமெயில் பயனர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த அப்டேட்டின் முக்கிய அம்சமாக, பயனர்கள் தங்களின் கூகுள் கணக்கை மாற்றாமல், ஜிமெயில் யூசர் நேமைக் மட்டும் புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.

அதாவது, ஜிமெயில் முகவரி மாறினாலும், பழைய முகவரிக்கும் புதிய முகவரிக்கும் வரும் அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே இன்பாக்ஸில் கிடைக்கும். இதனால், முக்கிய மெயில்கள் தவறிவிடும் என்ற அச்சம் தேவையில்லை என கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், இந்த மாற்றத்திற்குப் பிறகு அடுத்த ஒரு வருடத்திற்கு ஜிமெயில் முகவரியை மீண்டும் மாற்றவோ அல்லது நீக்கவோ முடியாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது படிப்படியாக உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஜிமெயில் முகவரி மாறினாலும், மெயில்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், புகைப்படங்கள், கோப்புகள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கப்படும். யூடியூப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகளை பயன்படுத்துவதிலும் எந்த இடையூறும் இருக்காது என கூகுள் உறுதியளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One account new email address major update brought by Google Gmail users


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->