ஹாரர் ரசிகர்களுக்கு 11.11 மணிக்கு சர்ப்ரைஸ்! ‘டிமான்ட்டி காலனி 3’ பர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியீடு
surprise horror fans at 11point11 AM first look update Demonte Colony 3 released
தமிழ் சினிமாவின் கல்ட் ஹாரர் திரில்லர் வரிசையில் தனித்த அடையாளம் பதித்த ‘டிமான்ட்டி காலனி’ மீண்டும் பரபரப்பை கிளப்ப தயாராகியுள்ளது.
அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘டிமான்ட்டி காலனி’, பயம், மர்மம், திரில்லர் என ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்ற படம்.
அந்தப் படம் பெற்ற மாபெரும் வரவேற்பே, தொடர்ச்சிப் பாகங்களுக்கு அடித்தளம் அமைத்தது.அதனைத் தொடர்ந்து, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’, கதையின் மர்ம உலகத்தை இன்னும் விரிவுபடுத்தியது.

இதில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘டிமான்ட்டி காலனி 3’ தற்போது உருவாகி வருகிறது. இதற்கிடையில், படக்குழு வெளியிட்டுள்ள புதிய அப்டேட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அதன்படி, ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை சரியாக 11.11 மணிக்கு வெளியாகும் என, ஸ்டைலிஷ் வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஹாரர் ரசிகர்கள் மத்தியில் தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
English Summary
surprise horror fans at 11point11 AM first look update Demonte Colony 3 released