470 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து கடத்த முயன்ற 470 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்!  இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 470 கிலோ எடை கொண்ட மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளிலிருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, தமிழகத்தின் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நேற்று மாலை கடலில் 14 மூட்டைகள் மிதந்து கொண்டிருந்தது. 

இந்நிலையில், இலங்கை கடற்படையினர் மிதந்து கொண்டிருந்த அந்த 14 மூட்டைகளை கைப்பற்றி புத்தளம் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு அந்த 14 மூட்டைகளை பிரித்துப் பார்க்கும் போது அந்த மூட்டைகளுக்குள் 470 கிலோ மஞ்சள் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து. இலங்கை கடற்படையினர் முதற்கட்ட விசாரணையில்,  தமிழக கடற்பகுதியிலிருந்து இந்த மஞ்சள் மூட்டைகள் கடத்தி வரப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் மஞ்சள் மூட்டை கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

470 kg yellow bags seized


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->