புதைக்கப்பட்ட 440 உடல்கள்.! ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்ட நகரில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த ரஷ்ய படைகள் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன.

தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள் கார்கீவ் பகுதியில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் டொனெட்ஸ்க், இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட இஸியம் நகரில் ஆய்வு செய்தபோது ஒரு வனப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் 440 உடல்கள் புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் ரஷ்ய வீரர்கள் அப்பாவி மக்கள் பலரை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. போரில் கொல்லப்பட்டு வீரர்களின் உடல்கள் ஒரே இடத்தில் வந்து போட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனில் உண்மையில் என்ன நடந்துள்ளது என்பதை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

440 buried bodies found in city recovered from Russia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->