கேபிள் அருந்ததால் கேபிள் கார் கீழே விழுந்து 4 பேர் பலி... இத்தாலியில் பரபரப்பு!!!
4 people died after cable car fell down due cable accident There stir Italy
இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்கு, சுற்றுலாப்பயணிகளுக்காக 'கேபிள் கார்' அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தற்போது அங்கு சீசன் என்பதால் 'கேபிள் கார்' சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு ஏற்றிச்சென்ற கேபிள் காரில், கேபிள் அறுந்து விழுந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளன.
மேலும் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த மறுகனமே இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கினர்.
மேலும் இந்த கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
4 people died after cable car fell down due cable accident There stir Italy