பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு 324 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பருவநிலை மாற்றம் காரணமாக பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ளன.

மேலும் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 32 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 1200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பல நாட்களாக தேங்கி நிற்கும் மழை நீரால் வயிற்றுப்போக்கு, காலரா, மலேரியா, தோல் நோய்கள் மற்றும் கண் தொற்றுகள் பரவி வருகின்றன. இதையடுத்து மலேரியா உள்ளிட்ட நீரின் மூலம் பரவும் நோய்களினால் 324 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சிந்து மாகாணத்தில் மட்டும் 78000 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் வயிற்றுப்போக்கால் 90000 பேர் சிந்து மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

324 people died in Pakistan due to malaria and other diseases


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->