ரஷ்ய விமானப்படை தளம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன் - 3 வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஐநா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தற்பொழுது ரஷ்ய படைகள் உக்ரைன் மீது இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக நடத்திய வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் தென்மேற்கு சரடோவ் பிராந்தியத்தில் உள்ள இராணுவ விமானபடை தளத்தின் மீது நேற்று 01:35 மணியளவில், பறந்து உக்ரையனின் ஆளில்லா விமானத்தை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனிய ஆளில்லா விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி மூன்று ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரேனிய ட்ரோன்களால் ரஷ்யாவின் விமான தளம் குறிவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி உக்ரைனின் எல்லையிலிருந்து கிழக்கே 370 மைல்களுக்கு மேல் அமைந்துள்ளது என்றும், இந்த தாக்குதலால் ரஷ்ய விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Russian servicemen are killed from debris of a drone shot down


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->