அரசுக்கு எதிரான வன்முறை: 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்.! - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான ஈரானில், மஹ்சா அமினி என்ற பெண் கடந்த ஆண்டு செப்டம்பரில் இஸ்லாமியர்களின் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இதை எதிர்த்து நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் அடக்குமுறையால் போராட்டக்காரர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானருக்கு ஈரான் அரசு பொது மன்னிப்பு வழங்கியது. மேலும் போராட்டத்தின் பொழுது வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கடந்தாண்டு போராட்டத்தின் பொழுது இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பாசிஜ் தன்னார்வப் படையைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களையும், ஒரு போலீஸ் அதிகாரியையும் கொன்றதற்காக மஜித் கசெமி, சயீத் யாகூபி மற்றும் சலே மிர்ஹாஷேமி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து நேற்று அவர்களுக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 executed for violence against iran government


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->