இலங்கை || கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


இலங்கையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 6 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கனமழையால் 13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,000 ககும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நிலச்சரிவு சம்பவங்கள் வருகிற 19-ந்தேதி வரை தொடரும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரும் பட்சத்தில் சில பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 died in landslide in srilanka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->