துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 21 பண்ணை தொழிலாளர்கள்.. அதிர்ச்சியில் நைஜீரியா.! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட பகுதி மாகாணமான கட்சினா கம்பானியில் உள்ள மயிலாபியா கிராமத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் அந்த பண்ணையை ஆக்கிரமித்து, அதில் வேலை செய்து கொண்டிருந்த 21 தொழிலாளர்களை கடத்திச்சென்றனர். அவர்களை எங்கே கொண்டு சென்றனர் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் காம்போ ஈசா தெரிவித்ததாவது, 15 முதல் 19 வயது வரையிலான பண்ணைத் தொழிலாளர்கள் 21 பேர் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளனர். 

அவர்களில் நான்கு பேர் மட்டுமே ஆண்கள். மற்ற அனைவரும் பெண்கள் ஆவார்கள். இதையடுத்து கடத்தல் காரர்கள் தொழிலாளர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பண்ணை அதிபரிடம், அறுவடை பணிகள் பிரச்சினையின்றி நடைபெற வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று கடத்தல் கும்பல் பேரம் பேசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 farm workers kidnap in Nigeria north


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->