புகைப்படம் எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் - பசுபதிநாத் கோவில் நிர்வாகம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


புகைப்படம் எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் - பசுபதிநாத் கோவில் நிர்வாகம் அதிரடி.!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பாக்மதி ஆற்றங்கரை பகுதியில் உலக புகழ்பெற்ற பசுபதிநாத் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இந்தக் கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதந்தது தடையை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வத்தில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில், இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை இன்று ஆரம்பமாகியுள்ளது. இதற்கிடையே கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 fine for take photo at pasupathinath temple in nepal


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->