#அமெரிக்கா || பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

அமெரிக்கா விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே நேற்று மாலை பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடானது பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் வெளியே நின்று கொண்டிருந்தபோது, திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் பட்டம் பெற்ற 18 வயது மாணவரும், விழாவில் கலந்து கொண்ட 36 வயதுடைய நபரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ரிச்மண்ட் காவல்துறையின் செயல் தலைவர் ரிக் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூடு வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed 5 injured in shooting in university campus in America


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->