பாகிஸ்தான் : சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் சமீப காலமாக குண்டு வெடிப்புகள் மற்றும் பயங்கரவாத தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் போலீஸ்காரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானில் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் சர்சத்தா மாவட்டத்தில், நவ்ஷேரா சாலையில் போலீசார் வழக்கமாக சோதனை சாவடியில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது எதிர்பாராதமாக வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் சோதனை சாவடிகளின் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 போலீசார் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பியோடிள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கு பிறகு அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died in terrorist attack on tollgate in pakistan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->