சோமாலியாவில் நடந்த அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் அரசு அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதிகளில் நடந்த இரண்டு தொடர் கார் குண்டுவெடிப்பினால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் மற்றும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் முதல் குண்டு வெடிப்பு கல்வி அமைச்சகத்தின் அருகே பொதுமக்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் அருகே நிகழ்ந்தது. இதனால் சிறுவர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலானோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதையடுத்து முதல் குண்டு வெடிப்பிற்கு பின் காயமடைந்தவர்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் வரும் பொழுது அருகில் உள்ள உணவு விடுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அருகில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

மேலும் இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சகத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் பயங்கரவாத அமைப்பான சோமாலியாவின் கிளா்ச்சிப்படை அல் ஷபா அமைப்பை ஒழிப்பது தொடா்பான ஆலோசனையில் பிரதமர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 bomb blast in Somalia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->