ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிஸ்தான்-பாலுசெஸ்தான் மாகாண பகுதியில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு ராணுவ கர்னல் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

சிஸ்தான்-பாலுசெஸ்தான் பகுதியானது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளதால், எல்லையிலிருந்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய சில நபர்களால் ஒரு காவல் நிலையம் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போது, பாதுகாப்புப் படையினரும் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உளவுத்துறை அதிகாரி கர்னல் அலி மவுசவி கொல்லப்பட்டார். மேலும், பல போலீஸ்காரர்கள் மற்றும் பொதுமக்களும் காயமடைந்தனர் என்று மாகாண கவர்னர் ஹொசைன் கியாபானி தெரிவித்தார். 

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 killed in shooting in the southeastern part of Iran


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->