சூடான் சந்தையில் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த இரண்டு மாதங்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. ராணுவ அமைப்புகளுக்கிடையேயான ஆயுதத் தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இருதரப்பு ராணுவத்தினருடன் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நடத்திய பேச்சு வார்த்தையின் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேலும் 5 நாட்களுக்கு போருக்கு நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க இருதரப்பினரும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் சூடானின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள சந்தையில் துணை ராணுவ படையின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மனித உரிமை வழக்கறிஞர்கள் கூறும்பொழுது தெற்கு கார்ட்டூமில் உள்ள சந்தையில் இராணுவ படைகள் துணை இராணுவ படைகளை குறிவைத்து பீரங்கித் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 106 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இரு தரப்பிலும் கடுமையான போர் நிறுத்த விதிகள் மீறப்பட்டுள்ளது என்றும், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்ட பின் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 died as army attacks on market in sudan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->