ஆஸ்திரேலியா :: ஆற்றில் சுறா கடித்து 16 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநிலத் தலைநகர் பெர்த்தில் உள்ள ஆற்றில் சுறா கடித்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

பெர்த்தின் ஃப்ரீமண்டில் துறைமுகப் பகுதியில் உள்ள ஸ்வான் ஆற்றில் நேற்று முன்தினம் 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் ஜெட் ஸ்கை சவாரி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஆற்றில் டால்பின்களைப் பார்த்த சிறுமி உற்சாகத்தில் டால்பின்களுடன் நீந்துவதற்காக ஜெட் ஸ்கையிலிருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளார்.

அப்பொழுது சிறுமியை சுறா ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மதியம் 3:45 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

ஆனால் பலத்த காயங்களுடன் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்வான் ஆற்றில் நீந்தியபோது, சுறாவால் ஒருவர் பலத்த காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 year old girl died after being bitten by a shark in river in Australia


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->