130 பேர் பலி..1 லட்சம் வீடுகள் பாதிப்பு..மெக்சிகோவை புரட்டி போட்ட புயல்!  - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் அடித்த புயலுக்கு 1 லட்சம் வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளது,இதில்  130 பேர் பலியாகியுள்ளனர். 

மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் புயலால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் . அந்தவகையில் இந்த ஆண்டில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் என 2 புயல்கள் தாக்கியதில் , ஹிடால்கோ, புபேல்லா உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இரு புயல்களால், கனமழை, வெள்ளம் ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இதனால் மின்வினியோகம் தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் , ஹிடால்கோ மாகாணத்தில் கனமழைக்கு 66 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரேநாளில் 64 பேர் பலியாகி உள்ளனர்.மேலும்  60 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதுபற்றி ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த அளவுக்கு தீவிர மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. 1 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்றார். 

இதேபோன்று வெராகுரூஸ் மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 29 பேர் பலியானார்கள். 18 பேரை காணவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. 5 மாகாணங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களின் பரவலும் அதிகரித்து காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

130 people dead 100000 homes affected The storm that ravaged Mexico


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->