அமெரிக்கா: பிலடெல்பியா பார் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் பிலடெல்பியா பார் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சமீப நாட்களாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிலடெல்பியாவின் கிழக்கு அலெகெனி மற்றும் கென்சிங்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் துப்பாக்கிச் சூடிற்கான காரணம் தெரியாத நிலையில், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் நிலமை குறித்தும் எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 injured in Philadelphia bar shooting in America


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->