ஈரானில் 10 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து.. 5 பேர் பலி.. 80 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டில் 10 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் நாட்டின் தெற்குப் பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்துள்ள பத்து அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 மோப்பநாய் குழுக்களும், ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஈராக்கை ஒட்டிய பகுதியில் அமைந்த அந்த நகரில் இருந்த கட்டிடத்தில் வணிகத்திற்கான கடைகள் அமைந்துள்ளதுடன் குடியிருப்புவாசிகள் வசித்துள்ளனர். மேலும் இந்த கட்டிட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 80 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள குஜஸ்தான் மாகாண நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10-storey building collapses in Iran 5 killed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->