உகாண்டா தேவாலயத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 10 பேர் பலி - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் எல்லையில் அமைந்துள்ள காசிண்டிநகரப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உகாண்டா ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உகாண்டா அரசு ஏ.டி.எப் எனப்படும் உகாண்டா போராளிக் குழுவை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் அந்தோணி முஅலுஷாய், இந்த தாக்குதல் நேச நாட்டு ஜனநாயக படைகளால்( ஏ.டி.எப்) நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் தாக்குதல் நடந்துள்ளது. இதன் பின்னணியில் ஏடிஎப் அமைப்புதான் இருக்கிறது என்பதை அறிகுறிகள் தெளிவாக காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தாக்குலுக்கு இதுவரை ஏடிஎப் பொறுப்பேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 killed terrorist bomb attack in Uganda


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->