சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 06 தமிழர்கள்..! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தல் நடைபெற்றது. 97 இடங்களில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.  அதனை தொடர்ந்து, புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், மூத்த துணையமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோர் நாளை (மே 23) பதவியேற்கவுள்ளார்கள்.

புதிய அமைச்சரவையில் தமிழர்கள் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களும்  நாளை (மே 23) பொறுப்பு ஏற்கவுள்ளனர். அதன்படி அமைச்சரவையில் இடம்பெறுள்ள தமிழர்கள் விவரங்கள் பின்வருமாறு:-

01. கே.சண்முகம்- உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
02. விவியன் பாலகிருஷ்ணன்- வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
03. இந்திராணி ராஜா- பிரதமர் அலுவலக அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
04. தென்கிழக்கு மாவட்டத்தின் மேயராக தினேஷ் வாசு தாஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
05. ஜனில் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
06.முரளி பிள்ளை- சட்ட மற்றும் போக்குவரத்து துறையின் மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

06 Tamils ​​have won the Singapore general election and have been appointed to the cabinet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->