தென்னாபிரிக்காவில் வெள்ளை இன மக்கள் படுகொலை விவகாரம்: சிரில் ராமபோசாவுடன் டிரம்ப் கடும் வாக்குவாதம்..! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அப்போது வெள்ளை இன மக்கள் படுகொலை விவகாரத்தில் சிரில் ராமபோசாவுடன், டிரம்ப் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டுள்ளார். அதாவது உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி உடனான சந்திப்பின்போது, அதிபர் டிரம்ப் நிருபர்கள் சந்திப்பையும் ஒன்றாக நடத்தினார்.

இதன் போது  ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி ராமபோசாவிடம், டிரம்ப் காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், டிரம்ப், வெள்ளை இன விவசாயிகள் படுகொலையை ஆப்பிரிக்க அரசு தடுக்க தவறி விட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு எதிரான நில அபகரிப்புகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன்போது தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ராமபோசா மற்றும் அவரது அரசுக்கு எதிராக டிரம்ப் பேசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி வெள்ளை இன விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் நடக்கிறது என வீடியோக்கள் மற்றும் செய்தி துணுக்குகளையும் ஆவணங்களை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இதுபோன்ற வன்முறை மற்றும் இனவெறி சட்டங்களால், வெள்ளை இன தென்னாப்பிரிக்கர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ட்ரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், டிரம்பின் குற்றச்சாட்டுகளை ராமபோசா மறுத்துள்ளார். அத்துடன், தென்னாப்பிரிக்காவில் அனைத்து இன மக்களும் குற்ற செயல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்என்று தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்ப் கூறிய குற்றசாட்டுகளுக்கு சான்றுகளை நிரூபிக்க வேண்டும் என்று ராமபோசா அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump has a heated argument with Cyril Ramaphosa over the killing of white people in South Africa


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->