மழை திரும்புமா...? 23-ம் தேதி தமிழகத்தில் மிதமான மழை என எச்சரிக்கை...!
Will rains return Moderate rainfall predicted Tamil Nadu 23rd according warning
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே, குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது.

இதன் தாக்கமாக, இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். அதிகாலை நேரங்களில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.22-ம் தேதியிலும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
23-ம் தேதி, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில், உள் தமிழக பகுதிகளில் மழையின்றி வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Will rains return Moderate rainfall predicted Tamil Nadu 23rd according warning