வழக்கத்தை விட அதிக வெப்பநிலை; ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் வெப்ப அலை வீசம்; வானிலை மையம் எச்சரிக்கை..!
Weather department warns of heat wave in four districts including Erode
''தமிழகத்தில் கரூர் உள்ளிட்ட 04 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்திலும், ஜூலை 18, 19 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்'' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் நாளை (ஜூலை 17) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்திலும், ஜூலை 18, 19 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஜூலை 20 முதல் 22-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட -7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 81 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Weather department warns of heat wave in four districts including Erode