இன்றைய வெதர் அப்டேட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பொழியும்...? - வானிலை மையம் தகவல் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்களின் காரணமாக, இன்று 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், மழை பெய்யும் நேரங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் மாற்றங்கள்
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.இதேபோல், வடதமிழகப் பகுதிகளுக்கு மேலாகவும் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.மேலும், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் மன்னார் வளைகுடாவில் இருந்து மத்திய மகாராஷ்டிரா வரை, தமிழகம் மற்றும் உள்கர்நாடகா வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

இன்று எங்கெல்லாம் மழை?
இன்று (6-ந்தேதி) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் மழை தொடரும்
நாளை (7-ந்தேதி) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

8-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு
8-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

9-ந்தேதி மழை நிலவரம்
9-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

10-ந்தேதி கனமழை வாய்ப்பு
10-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

11, 12-ந்தேதிகளில் மழை குறையும்
11 மற்றும் 12-ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை
6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது.6 மற்றும் 7-ந்தேதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகலாம். 8 முதல் 10-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னையில் வானிலை எப்படி?
இன்று மற்றும் நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை
தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Weather Update! Which districts will receive heavy rain Meteorological Department Information


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->