முன்னெச்சரிக்கை: ஆகஸ்ட்டை காட்டிலும் செப்டம்பரில் கூடுதல் மழை பொழியும்: வானிலை மையம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழையின் முதல் பாதியில் நாடு இயல்பை விட அதிகமான மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பரில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பருவமழை காரணமாக ஹிமாச்சலப் பிரதேசம், திடீர் வெள்ளத்தை சந்தித்தது. இந்த பருவமழையின் 02-வது பாதியிலும் (ஆகஸ்ட்,செப்டம்பர்) இயல்பைக்காட்டிலும் அதிகமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பருவமழையின் இரண்டாம் பகுதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர் 2025) இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பதிவாகலாம் என்றும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், செப்டம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பருவமழையின் இரண்டாம் பாதியில் நாடு முழுவதும் இயல்பான மழைப்பொழிவை விட (நீண்ட கால சராசரியான 422.8 மி.மீ. இல் 106 சதவீதம்) அதிகமாக இருக்கும் என்றும் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நிருபர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Meteorological Department has announced that there will be more rain in September than in August


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->